பிறந்த நாள் கொண்டாட்டத்தால் வந்த வம்பு ; பிரபல ரவுடியை என்கவுண்ட்டர் செய்த போலீசார்.. திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 5:49 pm

திருச்சி ; பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகனை போலீசார் என்கவுண்ட்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட அனைவரையும் திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது, அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரை தாக்கி விட்டு தற்போது முயன்ற ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.

தொடர்ந்து, என்கவுண்ட்டர் நடைபெற்ற இடத்தில் நாட்டு துப்பாக்கி மற்றும் பாட்டில் வெடிகுண்டு ஆகியவற்றை போலீசார் கைது செய்தததாகக் கூறப்படுகிறது.

ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் மீது பல்வேறு கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!