கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கு….முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு: 7 இடங்களில் தீவிர சோதனை..!!

Author: Rajesh
17 May 2022, 10:05 am
Quick Share

சென்னை: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா வெளிநாட்டிலிருந்து பணம் பெற உதவியதாக சிபிஐ-ல் ஏற்கெனவே வழக்கு இருந்தது.

இந்த வழக்கில் 4 முறை சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Views: - 450

0

0