அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றுவது தண்டனையா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி!!

Author: Babu Lakshmanan
30 March 2022, 2:52 pm

அரசு அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை ஆகாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாடக்குளம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் புதிதாக கட்டிப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளே ரவுடிகள் பட்டியலில் உள்ளதால் ரவுடிகளை கைது செய்ய காவல்துறை அச்சப்படுகிறது. கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கைப்பேசியில் விரும்பத்தகாத காட்சிகள் வருவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை ஆகாது.

திமுக அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி சிறுமைப்படுத்தி வருவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும். தமிழக மக்களின் நலனுக்காக அதிகமான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் முதல்வர் வெற்றி பெற்று வர வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக வலுவான அழுத்தம் கொடுக்கும், எனக் கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?