பேருந்தில் மனைவிக்கு இலவசம்… கணவனுக்கு 4 மடங்கு கட்டணம் வசூலிப்பு… நாங்க பேருந்தில் இலவசம் கேட்டோமா..? சீமான் கொந்தளிப்பு..!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 10:42 am
Quick Share

காரைக்குடி: அரசு பேருந்துகளில் பயணிக்கும் மனைவிக்கு இலவசமாக இருந்தாலும், கணவனுக்கு 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசம் என்ற வாக்குறுதியை அளித்தது. அதன்படி, மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டம் வெறும் கண்துடைப்பு என்றும், பெண்களுக்கு இலவசமாக பயணிக்கக் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, டபுள் மடங்கு கட்டணமுள்ள பேருந்துகளின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், இலவசப் பேருந்து பயணம் மேற்கொள்வதால், பெண்களை அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மதிப்பதில்லை என்று புகாரும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயணிக்கும் மனைவிக்கு இலவசமாக இருந்தாலும், கணவனுக்கு 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது:- தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை குறித்து மக்கள் தான் பெருமையாக சொல்ல வேண்டும். மக்கள் பணத்தில் கூட்டம் போட்டு தி.மு.க.,வினரே கூறக்கூடாது. அரசு பேருந்துகளில் மனைவிக்கு இலவசம், கணவருக்கு 4 மடங்கு அதிக கட்டணம். பேருந்தில் இலவச கட்டணத்தை யாரும் கேட்கவில்லை.

டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை தலைகீழாக உள்ளது. இலவசங்கள் என்ற பெயரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை கையேந்த விடமாட்டோம். நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும். அந்த முடிவை பா.ஜ.க, எடுக்குமா..?, எனக் கூறினார்.

Views: - 541

0

0