என்னது, சைலேந்திர பாபுவா..? முடியவே முடியாது… தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆளுநர் ஆர்என் ரவி..!!

Author: Babu Lakshmanan
23 October 2023, 8:56 pm

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிப்பதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்என் ரவி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புகளை ஆளுநர் ரவி நிராகரித்துள்ளதாகவும், வேறு ஒருவரின் பெயரை பரிந்துரை செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டது முதல் தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசு தலைவர் வரை திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழக அரசு – ஆளுநர் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது.

இதனிடையே, டிஎன்பிஎஸ்சி தலைவராக டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவும், மேலும் 10 உறுப்பினர் பதவிகளுக்கான நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலை தமிழக அரசு ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோப்பின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், தமிழக அரசிற்கும் இரண்டு முறை கோப்புகளை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து மீண்டும் கோப்புகள் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பெற்ற ஆளுநர் ஆர்என் ரவி, சைலேந்திரபாபுவை நியமிக்கும் கோப்புகளை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், வேறு ஒருவரை பரிந்துரை செய்யவும் ஆளுநர் ரவி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?