திராவிட மாடலா, இல்லவே இல்லை.. பச்சை பொய் சொல்லுகிறார் PTR… திமுகவை தாக்கிப் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி..!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 2:32 pm

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியிருக்கையில், தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தராக முதல்மைச்சர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதையும் ஏற்க முடியாது. இது பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு எதிரானது.

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை. காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியே திராவிட மாடல். ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடலின் நோக்கம். ஆளுநர் மாளிகை கணக்கு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்.

தமிழகத்தில் தமிழை தவிர மற்ற மொழிகளை அனுமதிப்பதில்லை. ஆளுநர் ஒன்றும் ராஜா அல்ல ; ராஜ்பவன் என்ற ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற யோசித்து வருகிறேன். காலணியாதிக்கக் காலங்களில் கொண்டுவரப்பட்ட ராஜ்பவன் என்பதற்கு பதிலாக லோக் பவன் (மக்கள் இல்லம்) என அழைக்க விரும்புகிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!