வெறும் வீரவசனம்தான்.. இப்பவரைக்கும் வாய் திறக்காதது ஏன்..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 2:28 pm

வேலூர் ; ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31ம் ஆண்டு விழாவும், ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்திலும் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். முன்னதாக, ஆண்டு விழாவை முன்னிட்டு நாராயணி பள்ளியிலிருந்து மேளதாளங்கள் முழங்க 10008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

நாராயணி பழைய ஆலயத்தில் பொதுமக்கள் தங்களின் கைகளாலேயே அபிஷேகம் செய்தனர். அனைவருக்கும் ஆலய பிரசாதம் வழங்கப்பட்டது. சக்தியம்மாவும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகளை செய்தார். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்

பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆன்மீகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மிகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறிவருகிறார்கள். அது ஏற்புடையதல்ல, ஆன்மிகமும், தமிழும் ஒன்று தான். ஆண்டுதோறும் நான் நாராயணி ஆலயம் வருவேன். அது போல் தான் இந்த ஆண்டும் நான் ஆலயம் வந்து சாமிதரிசனம் செய்தேன்.

தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வதில்லை. நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டறிருந்தேன். இதுவரையில் எனக்கு பதில் இல்லை. கவர்னர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல், ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, ஏன் ஆளுநரை சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். எங்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முதல்வர் நாராயணசாமியும் கூறிவருகிறார்.

அதே போல் நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணிசாமி கூறுகிறார். உண்டியல் குலுக்கி புதுவைக்கும், ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை. சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமானம் உள்ளது. இதை கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார், என்று கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!