ஆடி மாதம் வரப்போகுது.. பக்தர்களுக்கு அருமையான வாய்ப்பு : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 9:52 pm

வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்க போகிறது. முதல் பிரிவில், முக்கிய கோவில்களான பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காளப்பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரிய பாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காளப்பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் ஆகிய 10 கோவில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் ஆன்மிக பயணத்திற்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது பிரிவாக மயிலாப்பூர் கபாலீசுவரர், முண்டக கண்ணியம்மன், கோலவிழியம்மன், தியாகராயநகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உணவு, தரிசன ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் செய்வார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் சுற்றுலாத்துறை இணையதளத்தில் இதற்கு விண்ணப்பித்தால் அவர்கள் விரும்பிய நாளில் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வார்கள். இந்த சுற்றுலாவிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!