இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம்.. பல்லியோடு சேர்த்து பொங்கல் பரிசு 22 பொருட்கள் விநியோகம் : திமுகவை விமர்சித்த எச்.ராஜா..!!

Author: Babu Lakshmanan
25 January 2022, 6:16 pm
Quick Share

சென்னை : திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
தெரிவித்துள்ளார்.

தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி, மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, இறுதியாக தனக்கு நேர்ந்த கதியை அதில் வாக்குமூலமாக கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எச்.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது :- கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கலைராஜா, பல்கலைக்கழக வளாகத்தில் தி.க கூட்டம் நடத்தினார். காஞ்சிபுரம் ஆண்டர்சன் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு திருநீரு, ருத்திராட்சம் அணிந்ததை ரவுடி போல இருப்பதாக கூறி இரண்டு மாணவர்களை அவமதித்துள்ளார் பள்ளி ஆசிரியர். தற்போது ஒவ்வொருவராக வெளியில் வர தொங்கியுள்ளனர். ஆண்கள் பேண்ட் , பெண்கள் பாவாடை கட்டுவார்கள் , பேண்ட்டுக்கு மேல் பாவாடை கட்டுவது சரியாக இருக்குமா என இந்துக்கள் கேட்கின்றனர்.

மாணவியின் மரணத்திற்கு டிஜிபி உட்பட அனைவரும் பொறுப்பு. இந்திய நாட்டு அடையாளம் இந்துத்துவா என்று உச்ச நீதிமன்றமே சொல்லலிவிட்டது. CSI meeting -ல் உங்கள் அரசு என சொன்னார் மாண்புமிகு முதல்வர், இந்த ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடக்கிறது. இந்து மத கலாசாரத்தில் மட்டுமே பெண்கள் தெய்வங்கள். பன்றியோடு சேர்ந்த கன்று போல கேஎஸ் அழகிரி என்ற கன்று தற்போது மாறிவிட்டது. திருமாவளவனுக்கு ஆதரவாக சனாதன தர்மத்தை அழிக்கவுள்ளதாக அழகிரி கூறியதை மொழிபெயர்த்து தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் , உத்தரபிரதேசத்துக்கு அனுப்பியுள்ளோம். காங்கிரசை குழி தோண்டி புதைக்க கிடைத்த நல்ல மனிதர் அழகிரி.

மண்டைக்காடு கலவரத்தில் பல இந்து பெண்களை மீன் தூண்டிலை வீசிக் கொன்றார்கள். கலவரம் தொடர்பாக விசாரித்த வேணுகோபால் ஆணையமே மதமாற்ற தடை சட்டத்தை பரிந்துரைத்தது. நிதி அமைச்சர் என்னை பிகாரி என்கிறார். என் தாத்தா பெயர் சிதம்பரம், நான் எப்படி பிகாரி ஆவேன். மணப்பாறையில் ஆழ்துளை யில் விழுந்து இறந்த குழந்தை கிறிஸ்தவ குழந்தை என்பதால் பணம் கொடுத்தனர் , அரியலூர் குழந்தை இந்து என்பதால் யாரும் ஏதும் தரவில்லை.

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லியோடு சேர்த்து 22 பொருள்கள் இருந்தன.கொலை பாதகத்திற்கு அஞ்சாத அரசு இது. திருத்தணி குப்புசாமி மரணம் அதைத்தான் காட்டுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கலப்படமே இல்லை என அமைச்சர் சொல்கிறார் , முதல்வர் தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் , இதில் எந்த வாய் நல்ல வாய்..? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு குட் பை சொல்ல வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 2678

1

0