மனிதாபிமானத்துக்கு உயிரூட்டிய ஒடிசா மக்களுக்கு HATSOFF : மெய்சிலிர்த்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 2:04 pm
Vanathi - Updatenews360
Quick Share

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக, ஒடிஸாவை சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதுவரை 500-க்கும் அதிகமான யூனிட் இரத்த தானத்தை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து வானத்து சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்து , ரத்தம் தேவை படுவோருக்கு ரத்ததானம் வழங்கி பெருந்துயரான காலத்தில் பேருதவி செய்து மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 148

0

0