வரலாற்று வெற்றிக்காக மனமார்ந்த வாழ்த்துகள் : பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 7:42 pm
EPS Wish Modi - Updatenews360
Quick Share

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 7வது முறையாக அமோக வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மோடி மீது மாநில மக்களின் நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது. வரலாற்று வெற்றிக்காக மனமார்ந்த வாழ்த்துகள் பாஜக. என தெரிவித்துள்ளார்..

Views: - 94

0

0