இந்து கடவுள் விவகாரம்… மத ரீதியான வெறுப்பு அரசியல்.. திமுக மன்னிப்பு கேட்டே ஆகனும்: நாராயணன் திருப்பதி..!!

Author: Babu Lakshmanan
11 October 2022, 5:54 pm
Quick Share

உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்களிடம் கூறி மொழி, மத ரீதியான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது திமுக என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான குழு குடியரசுத் தலைவருக்கு தாக்கல் செய்த அறிக்கையை எந்தவித ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சர் விமர்சித்திருப்பதோடு, உண்மைக்கு புறம்பாக மக்களுக்கு தெரியப்படுத்தியை கண்டிக்கிறோம்.

எய்ம்ஸ், ஐஐடி பல்கலைகழகங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும், மற்ற மொழி பேசும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளில் மாநில மொழிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு இனி கடிதம் அனுப்ப வேண்டும் என்றால் இந்தியிலும், தமிழிலும் அனுப்பலாம் அவர்கள் தமிழில் பதில் அனுப்புவார்கள். திமுகவினர் எப்படி பேசுகிறார்களோ, அதேபோல நாங்களும் பதில் சொல்லுவோம். இந்துக்கள் யார் என அம்பேத்தகர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டதற்கு எதிராக பேசுகிறார் திருமாவளவன்.

ஒரு சில தீயசக்திகளை கொண்டு இந்துக்கள், இந்து கடவுள்களை குறித்து தவறாக திரித்து எழுத வைத்ததற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். மொழி, மத ரீதியான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது. திருமாவளவன் போன்றோரை திமுக தூண்டி விடுகிறது”, என்றார்.

Views: - 413

0

0