அண்ணாமலை போன்ற வெட்டியாக பேசுபவர்கள் பற்றி பேச விரும்பவில்லை.. அமைச்சர் TRB ராஜா பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 9:21 am

அண்ணாமலை போன்ற வெட்டியாக பேசுபவர்கள் பற்றி பேச விரும்பவில்லை.. அமைச்சர் TRB ராஜா பதில்!

இந்திய கூட்டணியின் கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து, அமைச்சர் டிஆர்பி ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் பொழுது,
எல்லோரும் தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் நமது அணிக்கு மகத்தான பலம் சேர்ந்து வருகிறது. தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை கொண்டு சேர்த்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம்.

தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களையும் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்து வருகின்றார். தொழில் வளர்ச்சிக்கு மகத்தான, அற்புதமான திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

ஒவ்வொரு துறைக்கும் தகுந்த தொழில் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. பல்வேறு திட்டங்களை தந்த முதலமைச்சருக்கு, ஆதரவளிக்கின்றனர். வருகின்ற தேர்தலிலே, திமுகவுக்கு மகத்தான வெற்றியை தர பெண்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் நேரத்தில் பல்வேறு கோரிக்கைகள் தெரிய வருகின்றன. மிகவும் வேகமாக தமிழ்நாடு அரசாங்கம் செயல்படுகிறது. எக்ஸ் பக்கத்தில் பதிவு போடுவதற்கும் தொடர்பான கேள்விக்கு, உடனடியாக முதலமைச்சர் ரிப்ளே செய்கிறார்.

அந்த அளவுக்கு வேகமாக முதல்வர் பணியாற்றுகிறார், என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கின்றன. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கின்றார்கள். கிரிக்கெட் மைதானம் கேட்டார்கள், உடனடியாக அந்த கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்தோம்.

சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள். உலகத்தரமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நான் தொழில்துறை அமைச்சராக ஓராண்டுகளாக பொறுப்பில் உள்ளேன். இந்த தேர்தல் நேரத்தில் தொழில்துறை சார்ந்தும், பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளேன்.

இன்னும் மூன்று மாத காலம் இங்கு இருக்க உள்ளேன். தேர்தல் பணியின்போது, கோவைக்கு தேவையான தொழில் வளர்ச்சிகளையும் பார்க்க முதலமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

தொழில்துறையினரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூருக்கு மகத்தான வளர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலை குறித்து கேட்ட பொழுது, நான் கோயம்புத்தூரின் வளர்ச்சி பற்றி பேசுகிறேன். வெட்டியாக பேசுபவர்களை பற்றி பேச விரும்பவில்லை என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

பேட்டியின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, பகுதி கழக செயலாளர் மார்க்கெட் மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!