அம்பானியும் ஆட்டோ டிரைவரும், மோடியும் டீக்கடைக்காரர்களும் : பிரச்சாரத்தில் திருச்சி சிவா சொன்ன விஷயம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 9:59 am
Trichy Siva
Quick Share

அம்பானியும் ஆட்டோ டிரைவரும், மோடியும் டீக்கடைக்காரர்களும் : பிரச்சாரத்தில் திருச்சி சிவா சொன்ன விஷயம்!

தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் தங்களது கட்சி சார்பாக வேட்பாளர் அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் தீவிர பிரச்சாரம் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கலில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் பேசும் போது முக்கியமான தகவல்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இதனால் வரை பத்திரிகைகளில் அதிகம் வெளிவந்திடாத தொலைக்காட்சிகள் முக்கியத்துவம் தந்திடாத ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சிலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டியது என்னுடைய கடமை.

கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்ற வருகிறது.

அந்த ஆட்சி இந்த பத்தாண்டு காலத்தில் இயற்றிய சட்டங்கள் மக்கள் விரோதத்திற்கு பணக்காரர்களுக்கு ஆதரவாக சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருந்தது செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் ஏழைகளுக்கு எதிராக இருந்தது.

நடந்து கொண்ட முறைகள் பல அவநம்பிக்கைகளை தோற்றுவித்தனர். அந்த நேரத்தில் எல்லாம் நாடாளுமன்றத்தில் அவர்களை எதிர்த்து போராடிய திருச்சி சிவா தான் இப்போது உங்கள் முன்னால் நான் வந்திருக்கின்றேன்.

மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து இந்த 10 ஆண்டுகளில் 108 தடவை பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலையை உயர்த்தியிருக்கிறார். பெட்ரோல் டீசல் கேஸ் எப்படி செய்கிறார்கள் என்றால் குருடு ஆயில் என்பதிலிருந்து தான் தயாரிக்கப்படும் அது நம்முடைய நாட்டில் கிடையாது ரஷ்யா ஈரான் சவுதி அரேபியா குவைத் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம்.

அப்படி செய்கின்ற அந்த மூலப்பொருள் ஒரு காலத்தில் ரொம்ப விலை அதிகம்.அப்போது மன்மோகன் சிங் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய் ஒரு சிலிண்டர் கேஸ் 500 ரூபாய் இப்போது அந்த குருட் ஆயிலின் விலை குறைந்திருக்கிறது.

ஆனால் மோடியின் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ஒரு சிலிண்டர் ஆயிரம் ரூபாய் இப்படி அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியதன் விளைவாக அரசாங்கத்திற்கு கிடைத்த பணம் பெட்ரோல் டீசல் கேஸ் மூலம் கிடைத்தது.

அரசு துறையை தனியாருக்கு வித்தன் மூலம் நாலரை லட்சம் கோடி சரி இதை வைத்து என்ன செய்தார்கள் என்றால் இந்த பகுதியில் இருக்கிற ஒருவர் டீக்கடை வைக்கணும் ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுங்கள் என்று ஒரு வங்கிக்கு போனால் கேரண்ட் இருக்கிறதாக என கேட்பார்கள், திருப்பி செலுத்த முடியுமான்னு கேட்பாங்க ஒரு லட்ச ரூபாய்க்கு ஆனால் பத்தாயிரம் கோடி 15000 கோடி வாங்கிட்டு வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு போய் தலைமறைவாக இல்லை உல்லாசமாக தெரிகிறருடைய கடனை மோடி அரசு தள்ளுபடி செய்தது.

ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை மாணவர்கள் கடனை தள்ளுபடி செய்யவில்லை உங்களிடமிருந்து வசூலித்த வரிப்பணத்தின் மூலம் பணக்காரர்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருந்தது .

இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்லி இருக்கக்கூடியவை எல்லாம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று தளபதி ஸ்டாலின் கை காட்டுகிறவர் பிரதமராக வந்தால் விவசாயிகளுடைய கடன் தள்ளுபடி செய்யப்படும் மாணவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் ஏழைப் பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு வீட்டில் ஒரு லட்ச ரூபாய் தரப்படும் நீட் தேர்வை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற பல முக்கியமான ஏழைகளுக்கு தேவையான அறிவிப்புகளை நாங்கள் தந்திருக்கிறோம்.

இந்த பேகம்பூர் பகுதியானது முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற பகுதி அதனால் உங்களுக்கு தெரிய வேண்டிய ஒன்று மோடி அரசு ஒரு மூன்று சட்டங்களை இயற்றியது ரொம்ப முக்கியமான மூன்று சட்டங்கள் அந்த மூன்று சட்டங்களும் பல பேருக்கு தெரியாத ஒன்று முதலாவது முத்தலாக் சட்டம் முத்தலாக் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்த பொழுது நாங்கள் எல்லாம் எதிர்த்தோம் என்ன காரணம் தெரியுமா.

அவர்கள் சொன்னார்கள் இங்கே நிறைய முஸ்லிம் இருக்கீங்க ஒருவர் தொலைபேசியில் அழைத்து மூன்று முறை தலாக் தலாக் தலாக் இதெல்லாம் அநியாயம் எனவே அப்படி சொல்லுகிற அந்த மாதிரி சொல்லுகிற தலாக் செல்லாது அப்படி சொன்னவருக்கு மூன்று ஆண்டு காலம் சிறைத்தண்டனை என்றார்கள்.

ரொம்ப முக்கியமா உங்களுக்கு தெரியாதுல அந்த மாதிரி எல்லாம் மூணு தடவை தொலைபேசி எல்லாம் சொல்ல முடியாது அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு ஜமாத்துல அந்த அம்மாவையும் கூட்டிட்டு வந்து நீங்க நல்லா இருக்கீங்களா அப்படின்னு கேட்டு இல்லனா தான் அடுத்தது.

இந்த மாதிரி வழிமுறைகள் இருக்கிறப்போ ஏதோ ரொம்ப அவசரமா செய்றது மாதிரி செய்தபோது நாங்கள் எதிர்த்தோம் பல காரணங்களை சொல்றப்ப நாங்க முஸ்லிம் பெண்களுக்காக நான் அப்ப நான் சொன்னேன் நான் ஒரு தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தேன். என்ன தீர்மானம் இந்தியாவில் 4 1/2 கோடி விதவைகள் இருக்கிறார் அவர்களுக்கு ஒரு நலத்திட்டத்திற்கு ஒரு சட்ட வேணும் தமிழ்நாட்டில் இருக்கு அது மாதிரி இந்தியா முழுக்க கொண்டு வாங்கன்னு ஒரு தீர்மானம் அந்த தீர்மானம் எல்லோரும் ஆதரித்து பேசினார்கள்.

ஆனால் ஓட்டெடுப்புக்கு போகிறப்போ பாரதிய ஜனதா வார்க்கடிக்கப்பட்டது. நான் கேட்டேன் இந்து விதவைகளுக்கு சட்டம் கொண்டு வர நினைத்தபோது தோற்கடித்த நீங்கள் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக என்று பேசுவது பொய் நீங்கள் முஸ்லிம் ஆண்களை தண்டிப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வந்தது ரொம்ப பழக்கமான சிஏஏ அப்படிங்கற குடியுரிமை சட்ட திருத்தம் என்ன அடிப்படையா அதெல்லாம் நாங்க சொல்லணும் நீங்களும் நானும் இந்திய குடிமகன் நமக்கு நிறைய உரிமைகள் உண்டு வெளிநாட்டுக்கு போனா கூட இந்தியா நம் இந்தியன் அப்படிங்கிற பாதுகாப்பு உண்டு அது இல்லைன்னாக்க என்ன ஒரு கப்பல் கிளம்புது அவங்களுக்கு கப்பல் குடியுரிமை எல்லாம் கிடையாது எந்த நாட்டுக்கு போனாலும் இரக்கமறுகிறார்கள் இரண்டு மாத காலம் சோறு தண்ணி இல்லாம குழந்த குட்டிகளோட பெண்கள் நடுக்கடலில் தத்தளிக்கிறான்.

இலங்கைத்தமிழர்கள் குடியுரிமை கிடையாது அவங்க ஒரு நாள் முழுவதும் போய் வேலை செஞ்சுட்டு வந்தா அப்படி கிடைக்கிற பணத்தை சேர்த்து வச்சு ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாது உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் ரொம்ப முக்கியம் இந்த சூழ்நிலையில் மோடி அரசு குடியுரிமை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வராங்க என்ன திருத்தம் பக்கத்துல ஒரு மூன்று நாடு இருக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் இந்த மூன்று நாடுகளில் இருந்தும் மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் இந்தியா குடியுரிமை தரும் நல்ல முயற்சி தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அது இந்தியாவுக்கு பாதிக்கப்பட்டு வர்றவங்களுக்கு குடியுரிமை தர்றாங்க அப்ப யார் யாருக்கு தெரியும் ஒரு கேள்வி வருமா வர்றவங்க எல்லாத்துக்கும் கொடுத்துவிடுவீர்களா?

இப்போது உரிமைத்தொகைன்னா அதுக்குன்னு சில இலக்கணங்கள் இருக்குல்ல அது மாதிரி குடும்பம் ஆறு பேருக்கு கொடுப்போம் யார் யார் அந்த ஆறு மதம்உங்கள் யார் யார் அப்படின்னு கேட்டப்ப இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் சார்ந்தவர்கள் நாங்கள் கேட்டோம் ஏன் அதுல முஸ்லிம் இல்ல அப்படின்னு கேட்டேன் ஒரு கேலி சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது நான் அதில் எதிர்த்து பேசுறப்ப என்ன சொல்லிக் கேட்டேன் தெரியுமா

இந்த நாடு விடுதலை அடைந்த போது இந்தியா பாகிஸ்தான் இரண்டாக பிரிகிறது பாகிஸ்தானுக்கு காரணமான முகமது அலி ஜின்னா சொன்னாரு நான் இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு நாடு உருவாக்கி இருக்கிறேன் இஸ்லாமியர்கள் எல்லாம் என்னோடு வாருங்கள் அப்படி என்றப்ப இங்கே இருந்த முஸ்லிம் சலாம் சொன்னாங்க நாங்க இஸ்லாமியர்கள் தான் ஆனால் இந்தியா தான் எங்கள் நாடு என்று தங்கினார்களே நன்றி காட்டப் போகிறோம் ராணுவ தலை இல்லையா அவங்க உலக அரங்கில் இப்போது இந்திய அணு ஆயுத நாடு அதற்கு காரணம் டாக்டர் அப்துல் கலாம் இல்லையா இது மாதிரி எவ்வளவு பேர் சாதிச்சி இருக்காங்க என்றெல்லாம் பேசிப் பார்த்தோம் எந்த விதமான எங்களுக்கு சாதகமான பதிலும் கிடைக்கல இப்ப என்ன பண்ணலாம் சண்டை போட்டு சஸ்பெண்ட் ஆகி வெளிய வந்து விழுகிறதா இல்ல ஒரு வழி இருக்கு என்ன வழி அப்படின்னா அவங்க கொண்டு வர சட்ட திருத்தத்துலையே நாங்க ஒரு திருத்தம் கொடுக்கலாம்.

உதாரணத்துக்கு சொல்றேன் ஒரே ஒரு சொல்லின் மூலமாக பெரிய மாற்றம் வரும் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் டாக்டருக்கு படிக்கணும் அப்படின்னா கல்வி தகுதி மட்டுமல்ல சமஸ்கிருதமும் தேவை அப்படின்னு ஒரு சட்டம் இருந்துச்சு சமஸ்கிருதம் தெரிஞ்சவங்க மட்டும் தான் டாக்டர் ஆக முடியும் இதை பார்த்த நீதி கட்சி திமுகவோட பாட்டை நீதிக்கட்சி என்ன பண்ணுச்சுன்னா ஆட்சிக்கு வந்த உடனே சமஸ்கிருதம் தேவைங்கிறதை மட்டும் அடிச்சாங்க. அடிச்ச அந்த பொண்ணுதான் என் புள்ள டாக்டரா ஆச்சு உங்க பிள்ளைங்க டாக்டர் ஆச்சு இன்னைக்கு லட்சக்கணக்கான சாதாரணமானவன் விட்டு பிள்ளை எல்லாம் டாக்டரா நாங்க ஒரு சட்ட திருத்தம் கேட்டீங்கன்னா இதுதான் உங்களுக்கெல்லாம் தெரியாது என பத்திரிகை எல்லாம் சொல்லல டிவிலாம் காட்டல என்ன செய்யறோம் அப்படின்னா நான் மூணு திருத்தம் கொடுத்தேன் அந்த சட்டத்தை என்ன திருத்தம்னா இந்த ஆறு மதங்கள் இவற்றோடு இன்க்ளூட் முஸ்லிம் நாடுகள் இருக்குல்ல அதோட இன்க்ளூட் ஸ்ரீலங்கா இலங்கையை சேர்த்துக்கோங்க இலங்கையில மதரீதியாக துன்புறுத்த புள்ள அப்படிங்கறத்துக்காக மூணாவதா இனரீதியாக ரிலிஜியஸ்லி அண்ட் எத்தனை கொடுக்கிறேன் இது பெரிய விஷயமா உங்களுக்கு தெரியும் ஆனா உள்ளபடியே நான் இரவு பகலா அந்த மசோதாவை படிச்சதுனால இந்த மசோதாவை தோற்படிப்பதால் பிரச்சனை இல்ல எனக்கு கிறிஸ்தவர்களுக்கு பலன் இருக்கு இந்துக்களுக்கு பலன் இருக்கு நமக்கு தேவை முஸ்லிம்சும் இலங்கை தமிழர் விடுபட்ட கூடாது.

இந்த திருத்தங்களை கொடுத்தேன் அது விவாதத்துக்கு நடந்துச்சு நடந்து முடிஞ்ச உடனே கடைசியா அது வாக்கெடுப்புக்கு முன்னால் சொல்றாங்க திருச்சி சிவா மூணு திருத்தம் கொடுத்திருக்கிறார் அதை என்ன செய்யலாம் வாக்கெடுப்புக்கு உட்றாங்க குரல் வாக்கெடுப்பில் தோற்றுப் போனது நான் என்ன கேட்டேன் மின்னணு வாக்குப்பதிவு கொடுங்க எத்தனை பேர் ஆதரவு எதிர்ப்புன்னு எனக்கு தெரியணும் அப்படின்னு கேட்கிறேன் அனுமதி தராங்க ஓட்டெடுப்பு நடந்தது அன்னைக்கு திமுகவுக்கு மாநிலங்களவையில் இருந்த உறுப்பினர்கள் வெறும் அஞ்சு பேர் தான் நானு ஆர்.எஸ். பாரதி பி கே சேலம் வில்சன் சண்முகம் எத்தனை ஓட்டு கடைசி தேதி தெரியுமா என் திருத்தத்துக்கு 99 ஓட்டுகள் இந்தியாவிலே இருக்கிற சிவாஜி க்கு ஆதரவா 124 ஓட்டு கிடைச்சது என் திருத்தம் தோத்துப்போச்சு அரசாங்கம் ஜெயிச்சது எத்தனை ஓட்டு வித்தியாசம் 25 இப்ப ரொம்ப முக்கியமா தெரிஞ்சுக்கணும்.

இந்த 25ல 13 ஓட்டு அதிமுக ஓட்டு அந்த 13 124ல கழிங்க 111 அந்த 13 நம்மளோட சேருங்க 112 ஒரு ஓட்டுல ஜெயிச்சி இருக்கும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடைச்சிருக்கும் இலங்கை தமிழருக்கு கிடைத்திருக்கும் அவங்க இல்லைன்னு சொல்ல முடியாது.

அவங்களோட இருந்த ஓட்டு போட்ட ஒருத்தரு இப்ப இங்க வந்து வாரியா தலைவராக ஆயிட்டான் 13 ஓட்டு அன்று அதிமுக அடித்த காரணத்தினால் இந்தியாவில் இன்னமும் இஸ்லாமியர்கள் வேதனையோடு வாழ்ந்த வருகிறார்கள் சிஏஏ சட்டத்தினுடைய பாதிப்பின் காரணமாக திமுகவைச் சார்ந்த திருச்சி சிவா ஒரு திருத்தத்தின் மூலம் எல்லோரும் வாழ வேண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் அப்படின்னு கொடுக்கிற திருத்தத்தை தீர்மானத்தை இவர்கள் மட்டும் ஒத்துழைத்து இருந்தால் இந்தியா இன்றைக்கு அமைதியாக இருந்திருக்கும் முத்தலாக் சட்டத்தை அவர்கள் ஆதரித்து ஓட்டு போட்டாங்க இதெல்லாம் விட இன்னொரு பயங்கரமான விஷயத்தை சொல்றேன். இன்னொரு சட்ட திருத்தம் வந்துச்சு எல்லாம் உங்களுக்கு தெரியாது முன்பெல்லாம் ஒரு தீவிரவாத குழுவோடு ஒருவர் சேர்ந்தால் அவர் தீவிரவாதி இந்த சட்ட திருத்தத்திற்கு பின்னால் ஒரு தனி மனிதனை காட்டி இவன் தீவிரவாதி அப்படின்னு சொன்னால் தீவிரவாதி அவரை கைது செய்கிற அதிகாரம் நம்ம போலீஸ் கிடையாது.

NIA க்குதால் உள்ளது அவர்கள் போய் உள்ள வச்சா எப்படி விசாரணை என்ன விசாரணை எவ்வளவு காலம் தெரியாது இன்றைக்கு இந்தியாவில் பல சிறைகளில் ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் சிறுபான்மையினர் இந்த சட்டத்தின் கீழ் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் இப்படி எல்லாம் பயங்கரவாத சட்டங்கள் நிறைய அரங்கேறிடுச்சு தமிழ்நாட்டில் இருக்கிற அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அப்படி என்பதற்காக வேண்டி சட்டம் போட வந்தா கவர்னர் குறுக்க நிக்கிறார் உங்களுக்கு மறந்து போயிருக்கும் நமக்கெல்லாம் ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி கொரோனா ஒரு காலம் இருந்துச்சு தெரியுமா?

நினைப்பு இருக்கா கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள் எப்படி இருந்தான் ஆறு மாச காலம் வீட்டுக்குள்ளே இருந்தோம் வீட்டுக்குள்ளே நான் எப்படி நம்ம வீட்டு கதவை தொடவே நமக்கு பயமா இருந்துச்சு ஜன்னலை திறந்து பக்கத்து வீட்ட பாக்க பயமா இருந்தது நம்ம வீட்டு பிள்ளைங்களே தூக்காதீங்க எதாவது ஆயிடும்னு சொன்னாங்க வயசானவனே தனியா பூட்டி வச்சு சோறு போட்டாங்க இப்படி எல்லாம் நடந்த கொடுமை அந்த கொரோனா நோயினால் வந்ததுனால பல பேர் கிளம்பி நடந்து அதுல வழியிலேயே நோய் இல்லாம செத்து போனவன ஆயிரக்கணக்கான இப்ப வீட்டுக்குள்ள அடைப்பட்டவங்கள்ள பணக்காரர்கள் பார்த்து சமாளிச்சுக்கிட்டாங்க.

ஆனா ஏழைகள் அன்றாடம் காட்சிகள் தினந்தோறும் வேலைக்கு போறவங்க ஆட்டோ டிரைவர் என்ன செய்ய முடியும் ஸ்டாலின் சொன்னாரு அதிமுக ஆட்சியில் ஒரு 5000 கொடுங்க சமாளிச்சுக்குவாங்க அப்படின்னு அவங்க 1000 தான் கொடுத்தாங்க திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு பின்னால் பெண்கள் பேருந்தில் பயணம் செய்தால் அதற்கு கட்டணம் இல்லை என்று சொல்லி ஒரு அண்ணனாக இருந்து ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் சுமையை குறைத்தது தளபதி ஸ்டாலினுடைய ஆட்சி உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கொடுப்பது திமுகவினுடைய ஆட்சி கல்லூரி போகிற பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவது திமுக ஆட்சி மகளிர் சுய உதவி குழுவிற்கு 2500 கோடி தள்ளுபடி பண்ணியாச்சு இதெல்லாம் நடத்தி காட்டிட்டு வந்து நிற்கிறோம்.

அதனால்தான் சொல்றோம். எங்க கூட்டணி வெற்றி பெற்றால் இந்த நன்மைகள் எல்லாம் செய்வோம் எல்லோருக்கும் ஒன்று சொல்வேன் நான் யாரு வேண்டா வெறுப்போடு பேசுகிற பழக்கமும் இல்லை அவசியமும் இல்லை இந்த நாட்டில் எல்லோரும் அண்ணன் தம்பியாய் வாழ வேண்டும் மத வேறுபாடு இருக்க கூடாது சாதி வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

ஏழை பணக்காரன் இருக்கக்கூடாது பக்கத்துல எங்கோ இருக்கிற வங்காளியும் இந்த பக்கம் இருக்கிற பஞ்சாபியும் தமிழனும் கரங்கோத்து நடக்கின்ற இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களும் இந்துக்களும் சீக்கியர்களும் அண்ணனாய் தம்பியாய் வாழ்கிற நிலைமை ஒரு அரசாங்கத்தால மட்டும்தான் செய்ய முடியும் அப்படிப்பட்ட அரசாங்கம் தான் வேணும் நம்ம யாரையும் பிரிச்சு பார்க்கவே தயாராக இல்லை.

ஆனால் இங்கே பதை பதை போல ஒரு சமுதாயம் வாழ்க இஸ்லாமிய சமுதாயம் எங்களுக்கு என்ன இப்படி எல்லாம் சட்டம் வருது அப்படின்னு தவிக்கிற நேரத்துல எல்லாம் அங்க போராடி பல நேரங்களில் முடியாம தான் இப்ப மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறோம் உனக்கு தெரிஞ்சிக்கங்க தாய்மார்களே இந்த நாடு விடுதலை அடைந்தபோது தேர்தலில் ஓட்டு அளிக்கும் உரிமை எல்லாருக்கும் கிடையாது பிரதமரும் என்ன சொன்னாங்க அப்படின்னா இல்ல ஏழைக்கும் ஓட்டு உரிமை தரணும் எப்படி கொடுக்கலாம்.

அப்படின்றப்ப 21 வயசான எல்லாருக்கும் ஓட்டுறாங்க வேண்டாம் அவங்க அவசரப்படுவாங்க உணர்ச்சிவசப்படுவாங்க என்று கூறினார்கள் ஆனால் சட்ட திருத்தத்தை ஏற்றிய அண்ணல் அம்பேத்கரும் நேருவும் 21 வயதை தாண்டி அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று வெற்றி பெற்றாலும் ஓட்டுக்காக அவர்கள் முன்னிலையில் போய் நாம் நிற்கத்தான் வேண்டும் அனைவரும் பொதுமக்களை ஓட்டு கேட்பதற்காகவாவது நமது சென்று சந்திக்க வேண்டும் என்று தெரிவித்து வாக்குரிமையை வழங்கினர்.

நீ பெரிய ஆளு சின்ன ஆளு எல்லாம் எல்லா இடத்திலும் எங்க வேணாலும் இருக்கலாம் ஆனால் 19ஆம் தேதி போய் வரிசையில் நிக்கிறீங்க இல்ல அங்க நான் சொன்னாலே இந்த மஞ்ச கயிறு போட்ட ஏழைத்தாய் நிற்கிறப்ப அம்பானி டெல்லியில் மறைகின்ற ஒரு பகுதி உண்டு அங்க அடுக்குமாடி குடியிருப்புல ஒரு பிளாட் மட்டும் 50 கோடி ரூபாய் ஒரு பிளாட் ஒரு வீடு இல்ல ஒரு அடுக்குமாடி 500 வீடு இருக்குன்னா அதுல ஒரு பிளாட் 50 கோடி அப்படிப்பட்ட இடத்தில் 27 மாடி கட்டி ஒரு வீடு வச்சிருக்காரு ஐயா அம்பானி அவர நிப்பாரு நீங்களே நிப்பீங்க உள்ளே இருக்கிற அதிகாரி அவர் பெரிய பணக்காரர் ஓட்டுக்கு ரொம்ப பெருசு நீங்க ஏழைன்னு சொல்ல முடியாது அங்கதான் அம்பானியும் ஆட்டோ டிரைவரும் ஒன்றாக நரேந்திர மோடியும் டீக்கடைக்கார ஒண்ணா வருது இல்ல உரிமை சீட்டு எல்லாருக்கும் சமமான கொண்டு போய் நிறுத்தி இருக்கிற செட் கம்பீரமா நடங்க என்னை யாரும் வற்புறுத்த முடியாது.

இந்த நாட்டை யார் ஆடுறதுன்னு சொல்ற உரிமையை அரசியல் சட்டம் எனக்கு தந்திருக்கும் நிமிர்ந்து நடங்க 19ஆம் தேதி காலை குளிச்சிட்டு போங்க நல்லா சிரிச்சிட்டு போங்க யார் தெரியுமா ஓட்டு வெச்சுருக்க ஓட்டு போட போறேன் எனக்கு கடமையாக்க தெரியும்னு போய் வரிசைல நில்லுங்க உள்ள போய் அரிவாள் சக்தி நட்சத்திரத்திற்கு போட்டு திரும்பி வாங்க.

அங்க அண்ணன் ஐயா மோடி கீழ இறங்கி இருப்பாரு தளபதி ஸ்டாலின் காற்றவரு பிரதமராக வருவார் இஸ்லாமியரும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் சேர்ந்து வாழலாம் ஏழைகளுக்கு திட்டம் கிடைக்கும் இது பணக்காரனுக்கான ஆட்சியா இருக்காது ஏழைகளுக்கான ஆட்சியா நாங்கள் நடத்துவோம் அப்படிங்கற உத்தரவாதத்தை தெரிவித்தார்

Views: - 77

0

0