அண்ணாமலை ஒரே ஒரு ட்விட் போட்டால் திமுக ஆட்சியே ஆடிவிடும் : அமித்ஷா எச்சரிக்கை!!!
Author: Udayachandran RadhaKrishnan28 July 2023, 9:27 pm
‘என் மண் என் மக்கள் யாத்திரை’ பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் நடைபயணம் தொடங்குகிறது. இதில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரை சென்னை வரை தொடர்கிறது.
பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், இன்று ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஷ்வரம் வந்தார்.
அப்போது பேசிய அமித்ஷா, அண்ணாமலை ஒரு ட்விட் போட்டால் உங்கள் ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது என்றும் திமுக என்றாலே ஊழல் தான் நியாபகம் வருகிறது என்றும் பேசினார். இது தொடர்பாக அமித்ஷா பேசியதாவது:- காங்கிரசும் முதல்வர் மு.க ஸ்டாலினும் மக்களிடத்தில் வாக்கு கோரும் போது அவர்களின் ஊழல்தான் நினைவுக்கு வரும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கையில் தமிழர்கள் அழித்து ஒழிக்க காரணமாக இருந்தது. குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று ஆசை. மு.க ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்று விருப்பம். லாலு பிரசாத் யாதவிற்கு தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
மம்தா பானர்ஜிக்கு அவரது மருமகனை முதல்வராக்க வேண்டுமென்று விருப்பம் இருக்கிறது. இவர்கள் இந்தியாவையோ தமிழ்நாட்டையோ வலுப்படுத்த நினைக்கவில்லை. மீனவர்களின் பிரச்சினைக்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம். காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை, தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கிறார்கள்.
நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக உள்ளது. திமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். காங்கிரஸ், திமுக என்றால் நிலக்கரி, 2 ஜி ஊழல்கள்தான் நினைவுக்கு வரும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்விட் போட்டால் உங்கள் ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. அவர்கள் செய்த பலகோடி ரூபாய் ஊழல் தமிழக மக்கள் முன் வெளியே வந்திருக்கிறது.
இந்த ஆட்சி ஊழல் புரிபவர்களின் ஆட்சி.. குற்றம் புரிபவர்களின் ஆட்சி… இந்த அரசு மின் பகிர்மான கழகத்தில் ஊழல் புரிந்த அரசு ஏழை மக்களுக்கு விரோதமான அரசு.. கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? செந்தில் பாலாஜி ராஜினாமாவை முதல்வர் ஸ்டாலின் ஏற்றால் எல்லா ரகசியமும் வெளியே வந்துவிடும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
0
0