திமுக மட்டும் இதை செய்தால் எத்தனை விஜய் வந்தாலும் ஜெயிக்க முடியாது : திருமாவளவன் பேசிய வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2024, 1:56 pm

திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், வரும் அக்டோபர் மாதம் மது ஒழிப்பு மாநாடு நடத்தஉள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் திருமா அழைப்பு விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இது குறித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக மீது விசிக அதிருப்தியில் உள்ளது, கூட்டணியை விட்டு வெளியே வர முயற்சிக்கிறது என விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்பொழுது நிர்வாகிகள் மத்திய பேசிய அவர், ”கட்டாயம் மதுக்கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் களத்தில் நிற்க வேண்டும். அதுதான் முக்கியம்.

ஏதோ நாம் தேர்தல் கணக்கிற்காக நிற்கிறோம், சீன் போடுகிறோம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இதில் நாம் தெளிவாக இருக்கிறோம். உறுதியாக இருக்கிறோம். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதனால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் அந்த விளைவுகளை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். அதுதான் முக்கியமானது.

இதை உங்களுக்கு முதலில் நம்பிக்கையாக சொல்ல, நம்பிக்கையை பதிவு செய்ய விரும்புகிறேன். எங்களுக்கு மது விலக்கில் உடன்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மதுவிலக்கை ஒத்துக்கொள்கிறார்கள்.

மதுவை ஒழிக்க வேண்டும் என ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்து இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி. இவர் திமுகவை சொல்வதற்கு பயந்து கொண்டு அவர் பூசி மொழுகி தேசிய கொள்கை என்று திசைத் திருப்புகிறார் என்கிறார்கள். நாங்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்கும் கொஞ்சம் ஞானம் வேண்டும். அப்படித்தான் இதைச் சொல்லியாக வேண்டி இருக்கிறது. திமுகவிற்கு நான் சொல்கிறேன் நீங்கள் மட்டும் இந்த தேர்தலுக்கு முன்னால் அரசு மதுபான கடைகளை மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும்” என்றார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?