ஒரே மொழி என்று திணித்தால் பல நாடுகள் பிறக்கும்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது : சீமான் சர்ச்சை பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 4:01 pm

ஒரே மொழி என்று திணித்தால் பல நாடுகள் பிறக்கும்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது : சீமான் சர்ச்சை பேச்சு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எழும்பூல் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழை மீட்க வேண்டியது நம் கடமை, தங்கள் நிலத்தில் தாய் மொழி பேசுவதற்கும், வழிபடுவதற்கும் உரிமை உள்ளது. அதற்காகவே மொழி வாரி மாநிலங்கள பிரிக்கப்பட்டன. இதை பேசினால் பிரிவினைவாதம் என சொல்கின்றனர்.

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும் , ஒரே மொழி என்று திணித்தால், பல நாடுகள் பிறக்கும், அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, நாங்கள் பிரிவினை பேசுகிறோம் என்று சொன்னால், அதற்கு காரணம் ஆட்சியாளர்கள்தான்.

தி.மு.க., 18 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி என, இரண்டு ஜனாதிபதிகளை தேர்வு செய்துள்ளது. இருவரும் கையெழுத்து போட்டிருந்தால், தமிழில் வழக்காடும் சட்டம் வந்திருக்கும்.

அப்துல் கலாமிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து இருந்தால், அவர் கையெழுத்து போட்டு இருப்பார். ஆனால், பிரச்னை முடியக் கூடாது என்று நினைக்கின்றனர். போராடுபவனை விட போராட துாண்டுபவன் தான் ஆபத்தானவன்.

அய்யா வைகுண்டர் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் ஆர்என் ரவி கூறுகிறார். அவர் ஐ.பி.எஸ்., படித்து எழுதினாரா; பார்த்து எழுதினாரா என்று நான் கேட்டதற்கு பதில் இல்லை.

‘இந்திய மொழிகளில் தமிழ் தான் தொன்மையானது’ என பிரதமர் மோடி, உலகம் முழுதும் சென்று பேசுகிறார். ஆனால், புதிதாக கட்டிய பார்லிமென்ட் கட்டடத்தில், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது; அங்கு தமிழ் இல்லை. இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் என அவர் பேசினார்.

  • Thug life movie streaming on netflix now சப்தமே இல்லாமல் கமுக்கமாக ஓடிடியில் வெளியான தக் லைஃப்! ஷாக்கில் ரசிகர்கள்!