கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி.. இனி இதுவும் சுலபம் தான் : அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 3:06 pm
Sekar Babub - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதோடு கோவில் நிலங்கள் கடந்த 4 மாதங்களில் ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோவில்களில் பக்தர்கள் எளிதாக வழிபாடு நடத்தவும், பணிகளை செய்துவிடும் வழி வகுக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.

முக்கியமாக கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் முறை கைவிடப்படும். இந்த முறை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சிறப்பு தரிசன கட்டணம் விலை குறைக்கப்படும்.

சமீபத்தில் தமிழ்நாடு கோவில்களில் சிறப்பு தரிசன முறை பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது சிறப்பு தரிசனம் பெயரில் கூடுதல் பணம் கொடுத்து வழிப்பாடு செய்யும் முறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முறையை கைவிட வேண்டும். கோவில்களில் எல்லோரும் சமம் என்ற நிலை வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதோடு இந்த சிறப்பு தரிசன முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அந்த முறையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க போவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்

இதற்கு இடையில் தனது துரையின் செயல்பாடுகளை மேம்படுவதற்காக அமைச்சர் சேகர்பாபு HR&CE மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். கோவில்களில் பராமரிப்பு பணிகள், கிராமப்புற கோவில்களில் ‘ஒரு கால பூஜை’, அதிகாரிகளின் ஸ்பாட் ஆய்வு மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் கண்காணிக்க இந்த ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கிராமப்புறங்களில் 15,000 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த செயலியை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படுகிறதா என்பதை எளிதாகச் சரிபார்க்கலாம்.

பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஆப் மூலம் கண்காணிக்கவும் விரைவுபடுத்தவும் முடியும் என தெரிவித்தார்.

Views: - 206

0

0