பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்…போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்: மதங்களை கடந்த மனித மாண்பு..!!(வீடியோ)

Author: Rajesh
21 March 2022, 9:40 am

தஞ்சை: பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்ற இந்துக்களுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் வழிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 18ம் தேதி கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை கர்நாடக அரசு உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது .இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதே போல் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் நடத்தி கொண்டிந்த வேளையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில் பால்குடும், காவடி ஏந்திகொண்டு பெரும் வாரியான பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

https://vimeo.com/690372839

அதனை புரிந்து கொண்டு இஸ்லாமியர் மக்கள் கோஷத்தை அப்படி நிறுத்தி கொண்டு ஊர்வலம் எளிதாக செல்லுவதற்கு மனித சங்கிலி அமைத்து பக்தர்களுக்கு எந்த இடையூறு இன்றி இஸ்லாமிர்கள் கரம் கோர்த்து கவசமாக நின்றனர். பக்தர்கள் கடந்து சென்ற பிறகு போராட்டத்தை நடத்தினர். இந்த வீடியோனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!