அடுக்குமாடி கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்வு: சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அறிவிப்பு..!!

Author: Rajesh
17 March 2022, 4:04 pm

சென்னை: சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றுக்கு அதன் சதுர மீட்டர் அளவுக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, சதுர அடி ஒன்றுக்கு ரூ.198 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தவகையில், ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சதுர மீட்டருக்கான கட்டணம் ரூ.198ல் இருந்து ரூ.218 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தெரிவித்துள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?