3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா: அடித்துச் சொன்ன ஐ.எம்.எப்: இலக்கு 2027….!!

Author: Sudha
16 August 2024, 2:20 pm

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இனி வரும் காலங்களில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது எனவும் கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்ததை விட, வளர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருந்தது எனவும் மேலும் 2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3 வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்)துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும்.இது, இந்திய அரசின் கணிப்பை விட அதிகம் என தெரிவித்துள்ளது.தனியார் நுகர்வு செலவினம் 2023-24-ம் நிதியாண்டில் 4.0 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இரு சக்கர வாகன விற்பனையைப் பார்த்தால், இது உங்களுக்கு தெரியும் மேலும் இந்தியாவில் வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது என அவர் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?