அண்ணாமலையுடன் இணைகிறாரா நடிகர் விஜய்? நடைபயணத்தில் பங்கேற்ற நிர்வாகிகளால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 11:10 am

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக தற்போது மதுரையை அடைந்துள்ளது.

இந்த நடை பயணமானது ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் மதுரை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விஜய் மக்கள் மன்ற கொடியோடு சிலர் கலந்து கொண்டனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் உளிட்ட ஏராளமானோர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

அப்போது அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவிற்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளாரா என்ற கேள்வியானது எழுந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!