ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம் இது : சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 12:19 pm
CM - Updatenews360
Quick Share

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நேற்று நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி சந்தித்தார். பின்னர், நேற்று மாலை நீலகிரியிலிருந்து சென்னை வந்தடைந்த திரௌபதி முர்முக்கு, தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி வருகை வரலாற்று முக்கியத்துவம். குடியரசு தலைவர் வருகை சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளன.

பள்ளிக் கல்வியை காமராஜர் வளர்த்தார், கல்லூரிக் கல்வியை கருணாநிதி வளர்த்தார், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலையில் தான் படித்தார், நானும் இங்கு தான் படித்தேன் என்று பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனவர்களுக்கு உரையாற்றினார்.

Views: - 388

0

0