உதயநிதியால் ரத்தானதா INDIA பொதுக்கூட்டம்..? சனாதனத்தால் வந்த வம்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 4:15 pm
Udhay India- Udpatenews360
Quick Share

உதயநிதியால் ரத்தானதா INDIA பொதுக்கூட்டம்..? சனாதனத்தால் வந்த வம்பு!!

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, பாஜகவும், காங்கிரஸும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரமாக ஆரம்பித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியானது திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா (I.N.D.I.A) என கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டமானது பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டங்களில் தான் இந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance) பெரும் பெயரும் வைக்கப்பட்டது அதேபோல ஒவ்வொரு பிரதான கட்சியில் இருந்தும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பாளர் குழுவையும் கடந்த முறை மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி அறிவித்தது.

இதனை தொடர்ந்து டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர் மத்தியில் கூறுகையில் , இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல் முதலில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் அக்டோபர் மதம் 2ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கான காரணம் குறித்து தெளிவாக இன்னும் குறிப்பிடப்படவில்லை.

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பது எதிர்க்கட்சி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருட இறுதியில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் திடீர ‘”இந்தியா” கூட்டணியின் ம.பி. போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு சர்ச்சை பூதாகரமாக்கப்பட்டதால் திமுக மீது “இந்தியா” கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதான் போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட காரணமாகவும் இருக்கலாம் என்கின்றன சில தகவல்கள். இருந்தபோதும் போபால் பொதுக் கூட்டம் ரத்து ஏன்? என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் விரைவில் வெளியாகும் என்பது எதிர்பார்ப்பு.

Views: - 187

0

0