இந்த TRENDக்கு இல்லையா END? மீண்டும் குடிநீர் குழாயுடன் சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை : மக்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 8:12 pm
Thiruthani Water - Updatenews360
Quick Share

திருத்தணி அருகே குடிநீர் குழாயுடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தெக்களூர் பகுதியில் 30-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் தெக்களூர் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சிமெண்ட் சாலை அமைக்கும் போது ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் குடத்தில் தண்ணீர் பிடிக்க முடியாத வகையில் தெரு பொது குழாய் மூடி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 164

0

0