எம்ஜிஆர், ஜெ.,வுக்கு பிறகு இபிஎஸ்க்கு அது நடக்கப் போகுது : சஸ்பென்சை உடைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 6:24 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்றாக வேண்டும் என கட்டாயத்தில் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, திமுக ஆட்சியில் நடந்து வரும் அவலங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்து வருகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செ செங்கோட்டையன் தேர்தல் பிரசாராத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கும் விதமாக தேர்தலில் அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதேபோல் இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பு முனையாக அமையும். யார் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள்.

தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து நல்ல தீர்ப்பை வழங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

  • Muthu vs Soundariya Nanjundan பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவருதான்.. கோப்பையுடன் வெளியான போட்டோ!!