தமிழ்நாட்டுக்கே நல்லது… ஆனா சொன்ன விதம் இருக்கே : அதிமுக முடிவு குறித்து விசிக எம்பி பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 8:34 pm

தமிழ்நாட்டுக்கே நல்லது… ஆனா சொன்ன விதம் இருக்கே : அதிமுக முடிவு குறித்து விசிக எம்பி பரபரப்பு பேச்சு!!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசியதாவது:- அதிமுக முடிவை நான் வரவேற்கிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது இந்த நாட்டுக்கு நல்லது. ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கு நல்லது. எனவே அதில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக தமிழ்நாட்டில் விளங்கி வந்தது. அதிமுகவே அதில் இருந்து வெளியேறி இருப்பது வரவேற்கதக்கது. அதை நான் வரவேற்கிறேன்.

பாஜக அரசியலோ… கருத்தியலோ.. அரசாங்கத்தின் நடவடிக்கைகளிளோ எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி அதிமுக இதை அறிவித்து இருந்தால் நாங்கள் வேறு விதமாக பார்த்து இருப்போம்.

அவர்கள் சொன்னது என்னவென்றால் எங்கள் மாநாட்டை கொச்சை படுத்திவிட்டோம். எங்கள் தலைவரை கொச்சை படுத்திவிட்டோம்.. என்றுதான் சொன்னார்களே தவிர… கொள்கை தமிழ்நாட்டிற்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. எனவே இது எப்போது வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட காரணத்தினால் இந்த மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.

எப்போது வேண்டும் என்றாலும் சேர்ந்து அதிமுக பாஜக சேர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணத்தில் தான் எங்கள் தலைவர் ( தொல் திருமாவளவன்) அன்றைக்கு சொன்னார். இன்றைக்கும் கூட அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவு… அதே போன்றதாகத்தான் இருக்கிறது. அதிமுக ஜெயலலிதா காலத்தில் எப்படி பாஜகவை கணித்ததோ அப்படி கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?