பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை… அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி..!

Author: Babu Lakshmanan
2 May 2023, 1:02 pm

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமானவரிதுறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பட்டு சேலைக்கு மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் நூற்றுக்கணக்கான பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வரிஏய்ப்பு செய்து வருகின்ற நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஏழு அதிகாரிகள், மூன்று காவலர்கள் உட்பட சுமார் பத்து பேர் இரண்டு கார்களில் வந்து ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்து வருகின்றார்கள்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இயங்கி வருகின்ற சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் கோபிநாத் மக்கள் நீதி மய்த்தின் மாநில பொது செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டால் காந்தி சாலையில் உள்ள மற்ற பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்களில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!