அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50 இடங்களில் ஐடி ரெய்டு : பரபரப்பு பின்னணி.. குவிந்த திமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 8:37 am

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கரூர் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெறும் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கோர்ட்டில் அளிக்கப்பட்ட பதிலில், பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!