கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் : மாணவி வீட்டில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 11:02 am
Kallakuruchi NCPCR - Updatenews360
Quick Share

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ விசாரணை நடத்தி வருகின்றனர். அதையடுத்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

Views: - 410

0

0