தமிழகத்தில் நுழைந்ததா குரங்கு அம்மை? குமரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறிகுறி…!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 12:45 pm
Quick Share

கன்னியாகுமரி : குமரியில் தந்தை, மகன், மகள் உள்பட 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு அம்மை நோய் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இது பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் கேரளாவில் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் குரங்குமை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வில்லுக்குறியை சேர்ந்த நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் இருப்பது தெரியவந்தது. இதில் தந்தை, மகன், மகள் உட்பட நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் இருப்பதை தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குரங்கு அம்மை நோய் உள்ளதை கண்டறிய புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். குரங்கு அம்மை நோய் ஏற்படுவதற்கு வெளித்தொடர்பு எதுவும் அவர்களுக்கு இல்லாத நிலையில், இதற்கான அறிகுறி குறித்தும் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். புனேவுக்கு சென்றுள்ள இவர்களது மாதிரிகள் பரிசோதனை முடிந்து வந்தால்தான், அவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 944

0

0