‘மரத்தில் இருக்கும் மங்கி.. வெளிய போங்கடா சங்கி’.. RCB பாணியில் வெற்றியை கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 5:18 pm

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை, ஆர்சிபி ரசிகர்களின் பாணியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

130க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போகிறது. இதனை கர்நாடகா, தமிழகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், பெங்களூரூவில் காங்கிரஸ் கட்சியினரின் கொண்டாட்டம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரூ அணியின் ரசிகர்கள், மேளதாளங்களுடன் கொண்டாடிய வீடியோ கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக டிரெண்டாகி வருகிறது.

தற்போது, ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டத்தை போன்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் மேளதாளங்களுடன், கிண்டலடிக்கும் வாசகங்களுடன் கூடிய பஞ்ச்சுகளை அள்ளி வீசி கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டம் காங்கிரஸ் கட்சியின் வார்ரூமில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!