பக்குவமில்லாத அரசியல்வாதி ராகுல்… கேரள CM பினராயி விஜயன் போட்ட குண்டு ; ஆடிப்போன I.N.D.I.A. கூட்டணி…!!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 6:30 pm
Quick Share

பக்குவமில்லாத அரசியல்வாதி ராகுல் காந்தி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பது இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கேரளாவில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும், மத்திய விசாரணை அமைப்புகள் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு, இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, நாட்டில் தீவிர அரசியல் முன்னேற்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை என்றும், அவர் ஒரு தீவிர அரசியல்வாதி அல்ல என்றும் கூறினார்.

மேலும் படிக்க: CM ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பாரோ..? கஞ்சா போதையால் நடக்கும் அடுத்தடுத்த சம்பவம் ; எச்சரிக்கும் அண்ணாமலை

மேலும், ராகுல் காந்தி வேறொரு கட்சியின் தலைவர் என்பதால், அது பற்றி நாங்கள் விமர்சிப்பதில்லை என்றும், கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக பேசியிருப்பது ராகுல் காந்தி பக்குவமற்றவர் என்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

Views: - 132

0

0