சினிமாவை மிஞ்சிய சம்பவம்… மண்டபத்திற்குள் புகுந்து மணப்பெண்ணை கடத்தல் ; பதற வைக்கும் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 8:26 pm
Quick Share

திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணை திருமண மண்டபத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவரும், பட்டின வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வெங்கடானந்து வீட்டில் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், சினேகாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள சினேகா முடிவு செய்தார்.

மேலும் படிக்க: லிப்ட் கொடுத்தவரை தாக்கிவிட்டு பைக்கை திருட முயன்ற இளைஞர்கள் ; வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கொடுத்த அட்வைஸ்!!

அதன்படி, வெங்கடானந்து குடும்பத்தினரின் ஏற்பாட்டின் பேரில் காதலித்தவரையே சினேகா திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து மண்டபத்தில் காத்திருந்த கொஞ்ச நேரத்திலேயே சினேகாவை கடத்தி செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றுள்ளனர். தடுக்க வந்தவர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவியும் பெண்ணை கடத்த முயன்றனர். ஆனால், கடத்தல் முயற்சி கைகொடுக்கவில்லை.

இதையடுத்து சினேகாவின் குடும்பத்தினர் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த கடத்தல் முயற்சியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 104

0

0