நள்ளிரவில் நடந்த சோகம்… கேரளாவில் அரசுப் பேருந்து – சுற்றுலாப் பேருந்து மோதி விபத்து… 9 மாணவர்கள் பலி.. பலர் கவலைக்கிடம்..!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 10:29 am
Quick Share

கேரளா ; கேரளாவில் அரசுப் பேருந்து மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா – எர்ணாகுளம் அருகே முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் உதகைக்கு சுற்றுலா கிளம்பினர். மொத்தம் 43 மாணவ, மாணவிகளும், 5 ஆசிரியர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உள்பட 51 பேர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் வடக்காஞ்சேரி அருகே பேருந்து செல்லும் போது, கொட்டாரக்கரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தின் பின்பக்கமாக அதிவேகமாக சென்ற சுற்றுலா பேருந்து மோதியதில் சுற்றுலா பேருந்து கவிழந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பள்ளி மாணவ, மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 45 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றுலாப் பேருந்து அதிவேகமாகச் சென்றதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக விபத்து நிகழ்ந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Views: - 396

0

0