கேட் போடும் கேரளா.. வருது அடுத்த தடுப்பணை… தூக்கத்தில் இருந்து முழிங்க முதல்வரே : இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 1:19 pm

கேட் போடும் கேரளா.. வருது அடுத்த தடுப்பணை… தூக்கத்தில் இருந்து முழிங்க முதல்வரே : இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக் கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.

மேலும் படிக்க: அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதி.. வனத்தை ஆக்கிரமிக்க திமுக பிளான் : எல்.முருகன் கண்டனம்!

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!