ஏற்காடு விபத்து வேதனை சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்தா..? அண்ணாமலை உருக்கம்..!!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 9:45 am

சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், இளம் சிறுமி உயிரிழந்ததும், பலர் காயமுற்றதும் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். சிறுமியின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் படிக்க: கோத்தகிரியில் பயங்கரம்… சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து ; 8 வயது சிறுமி உயிரிழப்பு…!

சமீபத்தில் ஏற்காட்டில் நடந்த விபத்தின் வேதனைச் சுவடுகள் மறைவதற்குள், மீண்டும் அது போன்ற விபத்து நடந்திருப்பது, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன், தங்கள் பயணங்களை பாதுகாப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!