ஓபிஎஸ் – டிடிவி தினகரன் அரசியல் அனாதை… தேனி போராட்டம் குறித்து கேபி முனுசாமி கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 10:28 am
Quick Share

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இரண்டு பேரும் போராட்டத்தின் மூலம் அரசியல் அனாதை ஆகிவிட்டார்கள் என தெரிவதாக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாவட்டத்தில் அதிக தொண்டர்களை திரட்டி வருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- இன்று நடைபெற்ற கூட்டத்தில் பத்து மாவட்டத்தில் இருந்து சுமந்த 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை கலந்து கொள்வார்கள். தொண்டர்கள் மிக எழுச்சியோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் பெரும் வெற்றி பெறும் என்ற வகையில் எழுச்சி உள்ளது.

மதுரை என்பது அதிமுகவிற்கு செல்வாக்கு நிறைந்த மாவட்டமாகும். வருகிற 20ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு பின் தமிழகத்தில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்.

மகளிர் உரிமை தொகை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உறுப்பினர் சேர்க்கைக்கு பொதுமக்களை தி.மு.க.வினர் மிரட்டுகின்றனர். ஆனால் நாங்கள் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமே உறுப்பினராக சேர்த்துக்கொள்கிறோம். மதுரை மாநாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இரண்டு தலைவர்களும் அனாதையாகி விட்டார்கள் என்று தெரிகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், `தர்மயுத்தம்’ நடத்திய ஓ.பன்னீ்ரசெல்வம் தற்போது டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொடநாடு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இவர்கள் நடத்துகின்ற போராட்டம் திமுகவிற்கு எதிராக தான் இருக்க வேண்டும், என தெரிவித்தார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், உன்னால் அமைச்சர் வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர்கள் சீனிவாசன், முன்னாள் கொறடா மனோகரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 278

0

0