குளிக்கலாம், குடிக்கலாம்… MIDNIGHT PUB.. அரைகுறை ஆடையில் போதையில் பெண்கள் : கேமராவை கண்டதும் ஓட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 4:25 pm
pub
Quick Share

குளிக்கலாம், குடிக்கலாம்… MIDNIGHT PUB.. அரைகுறை ஆடையில் போதையில் பெண்கள்.. கேமராவை கண்டதும் ஓட்டம்!!!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு பப்பில் விடிய விடிய அதிக சப்தத்துடன் மது விருந்து நடந்து வந்தது. அந்த பக்கமாக எதேச்சையாக வந்த சைதாப்பேட்டை போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

அப்போது அவர்கள் அந்த பாரில் உள்ள மேனேஜரிடம்” நள்ளிரவு 1 மணிக்கு மேல் எப்படி பாரை நடத்தலாம். உடனே மூடுங்கள்” என்றனர். ஆனால் மேனேஜரோ பாரை மூடாமல் இருந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்களை வெளியே செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அவர்களும் அதை கண்டுக் கொள்ளாமல் குடித்து கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர். இதனால் வெளியே சென்ற போலீஸார் இன்னும் சில போலீஸாரை அழைத்து வந்தனர்.

உடனே அந்த பப்பை நிர்வாகிகள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு ஆட்டம் காண்பித்தனர். இதையடுத்து ஒரு வழியாக கதவை திறந்து போலீஸார் உள்ளே சென்ற போது மது போதையில் ஆண்களும் அவர்களுடன் பெண்களும் ஆடி கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை வெளியேற்றினர்.

எனவே அவர்கள் அவசரமாக ஓடி வந்தபோது வெளியே இருந்த சில தமிழ் டிவி சேனல்கள் அதை வீடியோ எடுத்தன. இதனால் அந்த பெண்கள் கோபமடைந்தனர். சிலர் முகத்தை மூடினர்.

சில பெண்கள் துணியையும், சில பெண்கள் முடியையும் வைத்து முகத்தை மறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அது போல் கையில் இருந்த கைக்குட்டை , ஷால் உள்ளிட்டவை கொண்டு முகத்தை மூடி கொண்டனர். இன்னும் சில பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஓவர்கோட்டை எடுத்து மறைத்தனர்.

டிஸ்யூ பேப்பர் கொண்டும் மூடிச் சென்றனர். சிலர் தங்கள் ஆண் நண்பரை கட்டி பிடித்தபடியே முகத்தை காட்டாமல் சென்றனர். ஒரு பெண் தலையில் ஹெல்மெட் அணிந்த படியே கேமராமேனிடம் வாக்குவாதம் செய்தார். அவரை ஆண் நண்பர் சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.

வேறு பெண் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் முகத்தை மூடி கொண்டு வாக்குவாதம் செய்தார். என்னை போட்டோ எடுத்தால் தற்கொலை கேஸ் கொடுப்பேன் என அதிரடியாக மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 129

0

0