மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 2:33 pm

இந்து அறநிலையத்துறையை விமர்சித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் 7 வருடமாக சிபிஎம் அங்கம் வகித்து வருகிறது. ஆனால் மதுரையில் திமுக அமைச்சர்களுக்கும் கம்யூனிஸ்ட் எம்பிக்கும் 7ஆம் பொருத்தமாகவே உள்ளது. அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு.. எப்போது முடியும்?

அமைச்சர் மூர்த்திக்கும் எம்பி சு வெங்கடேசனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், திமுகவில் முக்கிய துறையாக உள்ள இந்து அறநிலையத்துறையை தற்போது எம்பி கடுமையாக சாடியுள்ளார்.

மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது X தளப்பதிவில், இந்து அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளை பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்பும் அறநிலையத்துறை நிர்வாகமே, அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா ?

  • coolie movie audio launch function on august first week இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!