ஓபிஎஸ் ஒண்ணும் யோக்கியவான் கிடையாது : அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரும் போது பல கட்சிகள் ஆட்டம் காணும்… காமராஜ் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 8:16 pm

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் காலை 5 மணி முதல் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது.

சோதனை ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் நாங்கள் வந்த காரில் ஏறிச் சென்றனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் பதில் ஏதும் அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டனர்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் .இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியும். அதன்படி சந்தித்துள்ளோம். சோதனை மூலம் என்னையோ சாதாரண தொண்டனையோ ஒன்றும் செய்து விட முடியாது. இதன்மூலம் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை முடக்கி விடலாம் என திமுக நினைக்கிறது. அது ஒரு போதும் முடியாது.

பொதுக்குழு கூட்டம் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மட்டுமே பேசும் பொருளாக உள்ளது. பொதுக்குழுவை சிறுமைப்படுத்தவே ஆளுங்கட்சி இது போன்ற செயலில் ஈடுபடுகிறது. மிரட்டலுக்கு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிக் கொள்கிறேன். ஒற்றை தலைமை வந்தால் பல்வேறு கட்சிகளுக்கு ஆட்டம் காணும். அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி செய்கிறது.

என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதையே அதிகாரிகள் தங்கள் கைப்பட எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். செலவுக்காக வைத்திருந்த 60 ஆயிரம் பணத்தை மட்டுமே அதிகாரிகள் சோதனை செய்து அதை மீண்டும் திருப்பி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். முறைகேடு செய்ததாக கூறும் பணத்தைவிட அதிகமாக கடன் உள்ளது. அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்றார்.

ஒ.பி.எஸ் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார் இதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது:- சொன்னவர் ஒன்றும் யோக்கியவான் அல்ல என பதிலளித்தார். மேலும் காலையிலிருந்து இங்கு வந்து எனக்கு ஆதரவு தந்துள்ள அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது குறித்து எதுவும் செய்து விட முடியாது என அறிக்கை அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

அப்போது அதிமுக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் ஒன்றிய குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!