இனி பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்.. பொதுஇடங்களிலும் மாஸ்க் அணிவது அவசியம் : மீண்டும் கட்டுப்பாடுகளை வெளியிட்ட மாநில அரசு!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 11:14 am

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே, பாதிப்புகளுக்கு ஏற்றவாறு அந்தந்த மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று நண்பகல் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனா பரவல் 15 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார். கடற்கரை, திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?