மருத்துவமனையில் மதிமுக தலைவர் வைகோ திடீர் அனுமதி: விரைவில் குணமடைய அன்புமணி பிரார்த்தனை!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 8:01 pm
Quick Share

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்தார். இந்த நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள வைகோ விரைவில் குணமடைந்து பொது வாழ்வை தொடர வேண்டும் என்று பா.ம.க. கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

வைகோ அவர்களுக்கு சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றி பெற வேண்டும்; வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 250

    0

    0