7 பேரின் உயிரை காவு வாங்கிய மினி லாரி : முந்திரி லோடு ஏற்றிச் சென்ற போது கோர விபத்து!

Author: Udayachandran RadhaKrishnan
11 செப்டம்பர் 2024, 11:53 காலை
Lorry Upset
Quick Share

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் தி.நரசாபுரம் மண்டலம் பொரம்பலம் கிராமத்தில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் நிடதவோலு மண்டலம் தாடிமல்லுக்கு முந்திரி லோடுடன் மினி லாரி புறப்பட்டது.

இந்த லாரி தேவாரப்பள்ளி மண்டலம் அரிபட்டிப்பாலு – சின்னகுடம் சாலையில் வந்த போது சாலையில் பள்ளம் இருந்ததால் அதில் செல்லாமல் தவீர்க்க முயன்று இடது பக்கம் லாரியை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்று கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் 9 பேர் இருந்த நிலையில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வாகனம் கவிழ்ந்ததில் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி 7 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Accident

லாரி கேபினில் இருந்த காயமடைந்த கந்தா மதுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் டிஎஸ்பி தேவகுமார், எஸ்எஸ்ஐ ஸ்ரீஹரிராவ், சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!

இந்த விபத்தில் தேவபத்துல பூரையா (40), தம்மிரெட்டி சத்தியநாராயணா (45), பி.சினமுசலயா (35), கட்டவ கிருஷ்ணா (40), கட்டவா சத்திபண்டு (40), தாடிமல்லா, சமிஷ்ரகுடம் மண்டலத்தைச் சேர்ந்த தாடி கிருஷ்ணா (45), நிடதவோலு மண்டலம் கடகோடேஸ்வராவைச் சேர்ந்த பொக்கா பிரசாத் ஆகியோர் உயிரிழந்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 238

    0

    0