விரைவில் அமைச்சரவை மாற்றம்..? CM ஸ்டாலின் குடும்பத்திற்காக சிறப்பு அர்ச்சனை… கோவில் கோவிலாக செல்லும் அமைச்சர்..!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 6:10 pm
Quick Share

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் உதயநிதி ஸ்டாலின். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 14ந் தேதி உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில், ஏற்கனவே ஒரு முறை அமைச்சரவையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியமைத்தார்.

CM Stalin - Updatenews360

அதாவது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.

வரும் 14ந் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆக்டிவ் இல்லாதவர்கள் அல்லது பணிகளில் திருப்தியை ஏற்படுத்தாதவர்களிடம் இருந்து அமைச்சரவையை பிடுங்கி உதயநிதிக்கு வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் செஞ்சி மஸ்தான், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார்.

அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்திற்கு நீண்ட ஆயுள் வேண்டி அர்ச்சனை செய்திருப்பது சக அமைச்சர்களையும் சற்று உற்று நோக்க வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 365

0

0