கனமழையால் மிதக்கும் சென்னை… தற்போதைய நிலை என்ன..? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 2:42 pm
Quick Share

பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. முதல்வர் தற்போதைய நிலவரங்களை கேட்டு வருகின்றனர். மழையின் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்க பாதையில் கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டும் தண்ணீர் உள்ளது. அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரை எந்தவிதமான மனித உயிரிழப்போ, கால்நடைகள் உயிரிழப்போ ஏற்படவில்லை. 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளது. 83 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 28 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டது. 6 மரங்களும், 38 கிளைகளும் விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எதிர் வரும் பருவ மழைக்கும் தயார் நிலையில் உள்ளோம். அனைத்து வித முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய் பணி 80% முடிந்ததன் காரணமாக தான் மழை நீர் பெருமளவு தேங்கவில்லை. மெட்ரோ பணி நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 260 பம்புகள் தயார்நிலையில் உள்ள நிலையில் 25 பம்புகள் பயன்பாட்டில் உள்ளது, என தெரிவித்தார்.

Views: - 313

0

0