சென்னை மேயரை அதட்டிய அமைச்சர் கே.என். நேரு… வீடியோவை பகிர்ந்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 9:44 pm

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மேயர் பிரியாவை அமைச்சர் கே.என். நேரு அதட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

சென்னை தினம் தலைநகரில் 2 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவர்களுக்கு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரிசுகளை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் கே.என். நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பேப்பரை வாசிக்கட்டுமா..? என்று அமைச்சரிடம் மேயர் பிரியா கேட்டார். அதற்கு அமைச்சர் கே.என். நேரு, “சொல்லுமா…” என அதட்டி சொன்னார்.

இதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு, சென்னையில் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.என். நேருவும் பதிலளித்தார்.

பின்னர், செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு மேயர் பிரியா எழுந்து சென்றார். அப்போது, பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அமைச்சர் கே.என். நேரு, “யம்மா, நிப்பியா அப்படியே” எனக் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் சென்னை மேயரை அமைச்சர் அதட்டி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர், எதிர்ப்பும், விமர்சித்தும் வருகின்றனர்.

https://twitter.com/Nareshh070391/status/1561695687691014144
  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!