திமுக நிர்வாகி மீது கல்லை வீசிய அமைச்சர்.. வைரலாகும் வீடியோ… ‘தட் இஸ் திராவிட மாடல்’ என விமர்சிக்கும் அதிமுக…!!

Author: Babu Lakshmanan
24 January 2023, 1:39 pm

திருவள்ளூர்: திருவள்ளூரில் திமுக நிர்வாகி மீது அமைச்சர் நாசர் கட்சி கல் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மொழி போர் தியாகிகளை கவுரவிக்கும் விதமாக, திருவள்ளூரில் நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாகவும், ஒரு இருக்கை மட்டும் எடுத்து வந்துள்ளார்.

இதை கண்டதும் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார். இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே அமைச்சர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போதை அமைச்சர் நாசரின் செயல் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த வீடியோவை பகிர்ந்து, ‘கட்சிக்காரரை கல்லைக் கொண்டு எறிந்து தாக்க முயன்ற அமைச்சர் ஆவடி நாசர். தட் இஸ் திராவிட மாடல்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!