பொண்ணு அடக்கமாத்தான் இருக்கணும்: தலையை குனிஞ்சு பேசு இல்லைனா அடிப்பேன்:பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர்…!!
Author: Sudha4 August 2024, 4:40 pm
சமீபத்தில் அமைச்சர் ஒருவர் பெண் அரசு அதிகாரியை வாய்க்கு வந்தபடி பேசி அடிப்பேன் என மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளம் புர்பா மித்னாபுர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் பெண் அதிகாரி மணிஷா சாகு என்பவர் ஈடுபட்டு இருந்தார். அவரின் உத்தரவுக்கு ஏற்ப ஊழியர்கள் விதிகளை மீறி கட்டியிருந்த கடைகளை அகற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.அவர்களின் நடவடிக்கைக்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு உருவானது.
தகவலறிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும், அமைச்சருமான அகில் கிரி அங்கே வந்தார். நடப்பதைக் கண்ட அவர் சற்றும் யோசிக்காமல் கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார்.
நீ ஒரு அரசு அதிகாரி, பெண் அதிகாரி எனவே என்னிடம் தலையை குனிந்து கொண்டு தான் பேசவேண்டும், கடைகளை இடிப்பதை நிறுத்திவிடு, மறுபடியும் இதில் மூக்கை நுழைத்தால் நீ இங்கிருந்து போகவே முடியாது மேலும் குச்சியால் அடிப்பேன் என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
அமைச்சரின் அராஜக போக்கை அங்குள்ள சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.பெண் அரசு அதிகாரியை வசைபாடிய அமைச்சர் மீது முதல்வர் மம்தா பானர்ஜி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
0
0