சாக்லெட் வாங்கி தருவதாக 6 வயது சிறுமியை கடத்திய மர்மநபர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2024, 4:12 pm
சாக்லெட் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பேகம்பஜார் சத்ரி பகுதியில் பிரியங்கா 26 என்ற பெண் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை மாலை தனது அண்ணன் மகள் பிரகதி (6), ருத்விக் 4 ஆகியோரை அழைத்து கொண்டு கட்டேலமண்டியில் உள்ள தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
பிரகதி தம்பி ருத்திக்குடன் வீட்டின் அருகே உள்ள முத்தியாளம்மா கோயில் அருகே விளையாடி கொண்டுருந்தனர். சிறிது நேரம் கழித்து ருத்விக் மட்டும் வீட்டிற்கு வந்தார். பிரகதி எங்கே என்று கேட்டால் தெரியவில்லை என ருத்விக் கூறுயதால் அத்தை பிரியங்கா சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப்பார்த்தார்.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை கிடைக்காததால் அபிட்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து 5 தனிப்படை அமைத்த அபிட்ஸ் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் குழந்தையை அழைத்து சென்ற நபர் அப்சல்கஞ்ச் என்ற இடத்தில் இறங்கினார்.
சாக்லெட் வாங்கி தருவதாக கூறி சிறுமி கடத்தல்!#viralpost | #viralvideos | #viralreels | #viralshorts | #shortsviral | #trendingvideos | #viralnews | #viral | #video | #Kidnapping | #Hyderabad | #Telangana | #CCTV | #children pic.twitter.com/0jZmUNDL6F
— UpdateNews360Tamil (@updatenewstamil) August 4, 2024
அங்கிருந்து சிறுமியை அழைத்துக்கொண்டு ஷம்ஷாபாத் – கொத்தூர் பஸ்சில் ஏறி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மர்ம நபர் அழைத்து சென்ற பிரகதியை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
0
0